சாம்பியன்ஸ் டிராபி: தீவிர பயிற்சியில் இந்திய அணியினர்


சாம்பியன்ஸ் டிராபி: தீவிர பயிற்சியில் இந்திய அணியினர்
x

image courtesy: BCCI

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ளது.

துபாய்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர் நேற்று முன்தினம் துபாய் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து துபாயில் நேற்று முதல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story