பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 340 ரன்கள் இலக்கு


பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 340 ரன்கள் இலக்கு
x

இந்தியா வெற்றிபெற 340 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

மொல்போர்ன்,

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாக்சிங் டே டெஸ்ட்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கம்மின்ஸ் ஓவரில் ரோகித் 9 ரன்னிலும், ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்) அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கோலி 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 310 ரன்கள் தேவை. இன்று ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


Next Story