பார்டர் - கவாஸ்கர் கோப்பை: அவரை தேர்வு செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கான காரணம் - உத்தப்பா


பார்டர் - கவாஸ்கர் கோப்பை: அவரை தேர்வு செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கான காரணம் - உத்தப்பா
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்தது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக இந்த தோல்விக்கு இந்திய முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்காதது பின்னடைவாக அமைந்தது. முதல் டெஸ்டில் பேட்டிங்கில் அசத்தியதால் வெற்றி பெற்ற இந்தியா, அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தது முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான புஜாராவை தேர்வு செய்து அழைத்து செல்லாதது மிகப்பெரிய தவறாக மாறியுள்ளது. அப்படி ஒருவேளை புஜாராவை நீங்கள் தேர்வு செய்யாதபோது அவருக்கு இணையாக விளையாடும் ஹனுமா விஹாரியை கூட தேர்வு செய்திருக்கலாம். அவரால் புஜாராவின் இடத்தை பூர்த்தி செய்து விளையாடிருக்க முடியும்.

ஆனால் அது போன்ற ஒரு வீரரையும் இந்திய அணி இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை. ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடக்கூடிய அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு அவசியம் தேவைப்படுவர். ஆனால் அவரைப் போன்ற ஒரு வீரரை அணியில் தேர்வு செய்யாதது இந்திய அணி செய்த தவறு" என்று கூறினார்.


Next Story