பார்டர் - கவாஸ்கர் கோப்பை கடைசி டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கம்? வெளியான தகவல்
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். ஏனெனில் கடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் முடிந்துவிடும்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.
ஏனெனில் நடப்பு பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் பெரிய அளவில் செயல்பாட்டை வெளிப்படுத்தாத ரிஷப் பண்ட் வெறும் 154 ரன்கள் (7 இன்னிங்ஸ்கள்) மட்டுமே அடித்துள்ளார். மேலும் முக்கியமான தருணங்களில் அதிரடியாக விளையாடி விக்கெட்டுகளை தாரை வார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.