பிக் பாஷ் லீக்; சிட்னி சிக்சர்ஸ் அபார பந்துவீச்சு...பிரிஸ்பேன் ஹீட் 138 ரன்கள் சேர்ப்பு


பிக் பாஷ் லீக்; சிட்னி சிக்சர்ஸ் அபார பந்துவீச்சு...பிரிஸ்பேன் ஹீட் 138 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: Image Grab On Video Posted By @BBL

சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பிரிஸ்பேன்,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் ஆடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பிரிஸ்பேனின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் பேண்டன் - ஜிம்மி பீர்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாம் பேண்டன் 19 ரன், ஜிம்மி பீர்சன் 24 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

தொடர்ந்து களம் இறங்கிய பிரிஸ்பேன் வீரர்கள் சிட்னி சிக்சர்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் காலின் முன்ரோ 9 ரன், மெக்ஸ்வீனி 34 ரன், மேட் ரென்ஷா 1 ரன், மேக்ஸ் பிரையன்ட் 2 ரன், பால் வால்டர் 22 ரன், சேவியர் பார்ட்லெட் 11 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி ஆட உள்ளது.


Next Story