பிக் பாஷ் லீக்; ரிச்சர்ட்சன் அபார பந்துவீச்சு... மெல்போர்ன் ஸ்டார்ஸ் 146 ரன்கள் சேர்ப்பு
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
பெர்த்,
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் இன்று தொடங்கியது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ கிளார்க் மற்றும் தாமஸ் ப்ரேசர் ரோஜர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜோ கிளார்க் ரன் எடுக்காமலும், தாமஸ் ப்ரேசர் ரோஜர்ஸ் 14 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியினர், மெல்போர்ன் ஸ்டார்ஸின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் சாம் ஹார்பர் 1 ரன்னிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 37 ரன்னிலும், ஹில்டன் கார்ட்ரைட் 18 ரன்னிலும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்னிலும், டாம் கர்ரன் 37 ரன்னிலும், ஹமிஷ் மெக்கென்சி 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஆட உள்ளது.