பிக் பாஷ் லீக்: பீல்டிங் செய்கையில் மோதிக்கொண்ட வீரர்கள்.. மருத்துவமனையில் சிகிச்சை


பிக் பாஷ் லீக்: பீல்டிங் செய்கையில் மோதிக்கொண்ட வீரர்கள்.. மருத்துவமனையில் சிகிச்சை
x

பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெர்த் அணி பேட்டிங் செய்கையில் 16-வது ஓவரை பெர்குசன் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட கூப்பர் கனோலி அதிரடியா விளையாடினார். அப்போது அவர் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயற்சிக்கையில் சிட்னி தண்டர் அணி வீரர்களான டேனியல் சாம்ஸ் மற்றும் பான்கிராப்ட் இருவரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இருவரும் களத்தில் அப்படியே வலியால் துடித்தனர். இதில் இருவருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆட்டம் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.


Next Story