பிக் பாஷ் லீக்; பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அபார பந்துவீச்சு...அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 142 ரன்கள் சேர்ப்பு


பிக் பாஷ் லீக்; பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அபார பந்துவீச்சு...அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 142 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: @StrikersBBL / @ScorchersBBL / @BBL

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடிலெய்டு,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து அடிலெய்டின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி ஆர்சி ஷார்ட் மற்றும் ஆலி போப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆலி போப் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கிறிஸ் லின் 1 ரன், ஜேக் வெதர்ரால்ட் 8 ரன், அலெக்ஸ் ரோஸ் 20 ரன், ஜேமி ஓவர்டன் 1 ரன், ஹென்றி தோர்ன்டன் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த டி ஆர்சி ஷார்ட் 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பிரெண்டன் டோகெட் மற்றும் கேமரூன் பாய்ஸ் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.

இறுதியில் அடிலெய்டு அணி20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தது. அடிலெய்டு தரப்பில் அதிகபட்சமாக பிரெண்டன் டோகெட் 47 ரன் மற்றும் கேமரூன் பாய்ஸ் 29 ரன் எடுத்தனர். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஆட உள்ளது.


Next Story