பிக் பாஷ் லீக்; பின் ஆலன் அரைசதம்...அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை வீழ்த்திய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்


பிக் பாஷ் லீக்; பின் ஆலன் அரைசதம்...அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை வீழ்த்திய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்
x

Image Courtesy: @StrikersBBL / @ScorchersBBL / @BBL

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பின் ஆலன் 50 ரன்கள் எடுத்தார்.

அடிலெய்டு,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தது. அடிலெய்டு தரப்பில் அதிகபட்சமாக பிரெண்டன் டோகெட் 47 ரன் மற்றும் கேமரூன் பாய்ஸ் 29 ரன் எடுத்தனர். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த் தரப்பில் அதிரடியாக ஆடிய பின் ஆலன் 50 ரன்கள் எடுத்தார்.


Next Story