பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. மழையால் ஓவர்கள் குறைப்பு
பெங்களூரு - பஞ்சாப் ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி மற்றும் 2 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்படும் சமயத்தில் மழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து சுமார் 2 மணிநேரம் தாமதாக டாஸ் போடப்பட்டது. இந்த ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட உள்ளது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.
பஞ்சாப் கிங்ஸ்: பிரியன்ஷ் ஆர்யா, நேஹால் வதேரா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் பிரார், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்








