பெங்களூரு வெற்றி கொண்டாட்டம்: ஆளும் கட்சியைக் குறை கூறக்கூடாது - ராஜீவ் சுக்லா


பெங்களூரு வெற்றி கொண்டாட்டம்: ஆளும் கட்சியைக் குறை கூறக்கூடாது - ராஜீவ் சுக்லா
x

பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பெங்களூரு அணி வீரர்களுக்கு , கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆகியோர் தலைமையில் பாராட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர்.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ துணை துணைத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராஜீவ் சுக்லா கூறியதாவது ,

இதற்கு ஆளும் கட்சியைக் குறை கூறக்கூடாது. இதை அரசியலாக்கக் கூடாது. கூட்டம் அதிகமாக இருந்தது, நான் அணியினரிடம் பேசினேன், இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று அவர்களும் நினைக்கவில்லை, இந்த சம்பவம் திடீரென்று நடந்தது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச உதவி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.என என என தெரிவித்தார் .

1 More update

Next Story