வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி இலங்கை


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி இலங்கை
x
தினத்தந்தி 28 Jun 2025 8:31 AM IST (Updated: 28 Jun 2025 10:43 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்தது

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து 2வது டெஸ்ட் கொழும்புவில் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்தது. இதையடுத்து, வங்காளதேசம் 2வது இன்னிங்சை தொடங்கியது.

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் இலங்கை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கையை விட 96 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்காளதேசம் உள்ளது. இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற வலுவான நிலையில் இலங்கை உள்ளது. 4ம் நாள் ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story