அதர்டன்-நாசர் உசேன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த இந்தியா - இங்கிலாந்து லெவன் அணி

image courtesy:PTI
இவர்கள் தேர்வு செய்த அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
லீட்ஸ்,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் 42 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
முன்னதாக இந்த தொடரை முன்னிட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா-இங்கிலாந்து அணிகளில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல்டைம் பெஸ்ட் பிளேயிங் லெவனை இங்கிலாந்து முன்னாள் வீரர்களான மைக்கேல் அதர்டன்-நாசர் உசேன் தேர்வு செய்துள்ளனர்.
அந்த அணியில் விராட் கோலி, ஜோ ரூட், மகேந்திரசிங் தோனி போன்ற நட்சத்திர வீரர்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை. இருப்பினும் அந்த அணியில் 6 இந்திய வீரர்களுக்கு அவர்கள் இடமளித்துள்ளனர்.
மைக்கேல் அதர்டன்-நாசர் உசேன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த இந்தியா-இங்கிலாந்து லெவன் அணி:-
சேவாக், அலஸ்டயர் குக், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கெவின் பீட்டர்சன், பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட், அஸ்வின், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.






