ஆசிய கோப்பை: பாகிஸ்தான், இலங்கை அல்ல.. அந்த அணிதான் கோப்பையை வெல்லும் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு


ஆசிய கோப்பை: பாகிஸ்தான், இலங்கை அல்ல.. அந்த அணிதான் கோப்பையை வெல்லும் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2025 10:24 PM IST (Updated: 18 Aug 2025 10:25 PM IST)
t-max-icont-min-icon

17-வது ஆசிய கோப்பை தொடரில் 8 அணிகள் கலந்துகொள்ள உள்ளன.

மும்பை,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த தொடர் குறித்தும், இந்த தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான சேத்தன் சர்மா இந்த தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது பின்வருமாறு:- “நம்முடைய நாட்டுக்காக தேர்வு செய்யப்படும் வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறந்தவர் என்பது எனக்குத் தெரியும். தற்போது நாம் விளையாடும் விதம், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் (இந்திய அணி) ஆசிய கோப்பையை வெல்வோம்” என்று கூறினார்.

1 More update

Next Story