அஸ்வின் ஓய்வு - தலைமை பயிற்சியாளர் கம்பீர் உருக்கம்


அஸ்வின் ஓய்வு - தலைமை பயிற்சியாளர் கம்பீர் உருக்கம்
x

3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது

பிரிஸ்பேன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது.மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று டிராவில் முடிந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஸ்வின் ஓய்வு தொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியளர் கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

"ஒரு இளம் பந்துவீச்சாளராக இருந்து, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறை பவுலர்கள் "அஷ்வினால் தான் நான் பவுலர் ஆனேன்" என சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் .என தெரிவித்துள்ளார் .


Next Story