2024-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற அமெலியா கெர்

image courtesy: ICC
ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கு ரேச்சல் ஹேஹோ பிளின்ட் டிராபி விருது வழங்கப்படுகிறது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது. அதன்படி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்படுபவருக்கு 'ரேச்சல் ஹேஹோ பிளின்ட் டிராபி' விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
அதில் நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் இலங்கையின் சமாரி அதபத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களில் சிறந்த வீராங்கனையாக அமெலிய கெர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரேச்சல் ஹேஹோ பிளின்ட் டிராபி விருது வழங்கப்பட உள்ளது.