எமர்ஜிங் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆப்கானிஸ்தான்


எமர்ஜிங் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆப்கானிஸ்தான்
x

எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

அல் அமேரத்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது. இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், இலங்கை ஏ - ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.


Next Story