ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்த உலக லெவன் அணி.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்


ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்த உலக லெவன் அணி.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்
x

ஏபி டி வில்லியர்ஸ் தனது உலக பிளேயிங் லெவனில் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

கேப்டவுன்,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல்-டைம் சிறந்த உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

டி வில்லியர்ஸ் தேர்வு செய்த அணியில் 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்களை தனது பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளார். அதுபோக 12-வது வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளென் மெக்ராத்தையும் சேர்த்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்த உலக பிளேயிங் லெவன்:

1. கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா)

2. மேத்யூ ஹெய்டன் (ஆஸ்திரேலியா)

3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

4. விராட் கோலி (இந்தியா)

5. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)

6. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)

7. மகேந்திரசிங் தோனி (இந்தியா)

8. மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா)

9. முகமது ஆசிப் (பாகிஸ்தான்)

10. முத்தையா முரளிதரன் (இலங்கை)

11. ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா).

12வது வீரர்: கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா)

1 More update

Next Story