3-வது டி20: ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. பாகிஸ்தான் 117 ரன்களில் ஆல் அவுட்
ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஹோபர்ட்,
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆஹா சல்மான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினர். பாபர் அசாம் மட்டும் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. வெறும் 18.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 117 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜம்பா மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.