3-வது ஒருநாள் போட்டி: அகமதாபாத் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி

image courtesy: BCCI twitter
இந்தியா - இங்கிலாந்து 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக் மைதானங்களில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் விமானம் மூலம் நேற்றிரவு அகமதாபாத் சென்றடைந்தனர். நேற்றைய ஓய்விற்கு பிறகு இன்று தீவிர பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story






