ஐ.பி.எல்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற 3 அணிகள்


ஐ.பி.எல்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற 3 அணிகள்
x
தினத்தந்தி 19 May 2025 7:49 AM IST (Updated: 19 May 2025 1:10 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் - டெல்லி அணிகள் நேற்று மோதின.

டெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் 19 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு நேற்று ஒரேநாளில் 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய 3 அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ , ஐதராபாத் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story