2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - வாஷிங்டன் சுந்தர்


2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - வாஷிங்டன் சுந்தர்
x

image courtesy: twitter/@BCCI

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எந்தவித சிக்கலுமின்றி எதிர்கொண்டது. ஆனால் சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 16-1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடம் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டியில், "முதல் டெஸ்ட் போட்டியில் நான் அங்கமாக கூட இல்லை. இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு நேரடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ரோகித் பாய் மற்றும் கம்பீர் பாய்க்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது நம்ப முடியாத உணர்வு. சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அல்லது எந்த பேட்ஸ்மேன் வந்தாலும் நான் துல்லியமாக பந்து வீச விரும்பினேன். இது கடவுளின் திட்டம்.

குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் கவனத்துடன் அடித்து பந்து வீசிய நான் வேகத்தை மாற்றினேன். அது வேலை செய்ததற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். பிட்ச் முதல் நாளிலிருந்தே சுழல துவங்கியுள்ளதாக நான் கருதுகிறேன். இருப்பினும் முதல் செஷனை போல 2வது செஷனில் சுழலவில்லை. 3வது செஷனில் செட்டிலானது. ரச்சின் ரவீந்திரா சிறப்பாக பேட்டிங் செய்தபோது அவருடைய விக்கெட்டை எடுத்ததும் மிட்செல் விக்கெட்டும் பிடித்தது" என்று கூறினார்.


Next Story