2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தமிழக வீரர்கள்


2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தமிழக வீரர்கள்
x
தினத்தந்தி 24 Oct 2024 4:28 PM IST (Updated: 24 Oct 2024 11:41 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

புனே,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோருக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி மொத்தமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் சுந்தர் (7) மற்றும் அஸ்வின் (3) வீழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை இழந்து 14 ரன்கள் அடித்துள்ளது.


Next Story