வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை ஆல்ரவுண்டர் விலகல்


வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை ஆல்ரவுண்டர் விலகல்
x

image courtesy:ICC

இலங்கை -வங்காளதேசம் 2-வது டெஸ்ட் போட்டி 25-ம் தேதி தொடங்க உள்ளது.

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வருகிற 25-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த 2-வது போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து ஆல்ரவுண்டரான மிலன் ரத்னாயகே காயம் காரணமாக விலகியுள்ளார்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- பதும் நிசங்கா, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, துனித் வெல்லலகே, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜெயசூரியா, தரிந்து ரத்னாயகே, அகில தனஞ்சய, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித, விஷ்வா பெர்னாண்டோ, இசிதா விஜேசுந்தரா

1 More update

Next Story