2-வது டி20: இந்திய அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 165 ரன்கள் எடுத்தது
சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 4 ரன்களும் , பென் டக்கெட் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் . தொடர்ந்து வந்த ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் . அவர்45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஹாரி புரூக் 13 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 13 ரன்களும், ஜேமி ஸ்மித் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 165 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .






