பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 ; டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார்
புலவாயோ,
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது .இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது
Related Tags :
Next Story