2-வது டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
டார்வின்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டார்வினில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி அதே டார்வின் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Related Tags :
Next Story






