முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார பந்துவீச்சு.. இலங்கை 178 ரன்களில் ஆல் அவுட்
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னண்டோ 56 ரன்கள் அடித்தார்.
வெலிங்டன்,
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இதன் முதலாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரர் ஆன அவிஷ்கா பெர்னண்டோ மட்டும் ஒருபுறம் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
அவிஷ்கா 56 ரன்களில் ஆட்டமிழக்க, பின்வரிசையில் ஜனித் லியானகே 36, ஹசரங்கா 35 ரன்கள் அடித்து அணி கவுரமாக நிலையை எட்ட உதவினர். முடிவில் 43.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், ஜேக்கப் டபி மற்றும் நாதன் சுமித் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 179 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்க உள்ளது.