தற்கொலை எதற்கும் தீர்வல்ல - இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்


தற்கொலை எதற்கும் தீர்வல்ல - இன்று  உலக தற்கொலை தடுப்பு தினம்
x
தினத்தந்தி 10 Sept 2023 8:21 AM IST (Updated: 10 Sept 2023 10:50 AM IST)
t-max-icont-min-icon

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சென்னை,

உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக பலர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. தற்கொலையால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. தற்கொலையை தடுக்கும் வகையில் உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மனநல ஆலோசனை, கலந்தாய்வு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வழிகளில் தற்கொலை எண்ணங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2003ம் ஆண்டு முதல் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அதன்படி, ஆண்டு தோறும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 10ம் தேதியான இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடவடிக்கையின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் அரசு சார்பில் மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் பல்வேறு மருத்துவமனைகளில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்ந்து அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story