மணக்கும் மருத்துவ மூலிகை, புதினா..!
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், பயன்படுத்துவீர்கள்.
* புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ பிளோவின், தயாமின் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளன.
* சட்னி, ஜூஸ் என எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். அவை உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது.
* ரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீரவும் புதினா உதவுகின்றது.
* வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
* புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்தும்.
* மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாறை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.