மிதக்கும் சந்தை
தாய்லாந்தில் மிதக்கும் சந்தை உள்ளது.
தாய்லாந்தில் ஓடுகின்ற மே க்ளாங்-தா சின் என்ற இரு நதிகளை டாம்நோயன் சடுவாக் கால்வாய் இணைக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கால்வாயின் நீளம் 35 கிலோமீட்டர். இதில்தான் உலகின் பிரபலமான 'டாம்நோயன் சடுவாக்' மிதக்கும் சந்தை இயங்கி வருகிறது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சந்தை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கூட இடம்பெற்றுவிட்டது. தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான படகுகளில் குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் காண்பதற்காக மட்டுமே லட்சக்கணக்கான மக்கள் இங்கே படையெடுக்கின்றனர்.
இந்தச் சந்தையின் தாக்கத்தால், கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தையும் ஆரம்பிக்கப்பட்டது. அபரிமிதமான மக்கள் தொகைப் பெருக்கத்தால் இன்னும் இருபது வருடங்களில் உலகின் முக்கிய நகரங்களில் எல்லாம் மிதக்கும் சந்தைகளை நாம் காணலாம்.
Related Tags :
Next Story