உடல் எடையை குறைக்கனுமா? இந்த உணவை எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..


உடல் எடையை குறைக்கனுமா? இந்த உணவை எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..
x
தினத்தந்தி 1 Feb 2024 7:27 AM IST (Updated: 1 Feb 2024 10:51 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உடல் பருமன் பிரச்சினை பலருக்கும் உள்ளது. பல்வேறு நோய்களுக்கும் இந்த உடல் பருமனே முக்கிய காரணமாக உள்ளது.

ன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக உடல் செயல்பாடுகள் குறைந்து பலரும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனை குறைப்பதற்கும், கட்டுக்கோப்பாக உடல் எடையை பராமரிப்பதற்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அத்துடன் சில வகை உலர் பழங்களை உட்கொள்வதும் உடல் பருமனை குறைக்க உதவும்.

உலர் பழங்கள் 'சூப்பர் புட்' என்றும் அழைக்கப்படுகின்றன. உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி நொறுக்குத்தீனிகளுக்கு மாற்றாக உலர் பழங்களை உட்கொண்டால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். உடலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சேர்வதை தடுக்கும். அத்தகைய உலர் பழங்கள் பற்றியும், அவற்றை ஏன் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

பிஸ்தா:

பிஸ்தாவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளன. இவை சுவையாக இருப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன. குறிப்பாக உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன் செரிமானத்திற்கும் உதவிபுரிகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிஸ்தா சாப்பிட்ட பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதன் காரணமாக மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்குள் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. நொறுக்குத்தீனி வகைகளிடம் இருந்து விலகி இருக்க வைத்துவிடும்.

முந்திரி பருப்பு:

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரியில் 70 சதவீதம் மெக்னீசியமும் உள்ளது. இது உடலில் கொழுப்பு கார்போஹைட்ரேட் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்காது. தினமும் உணவுடன் முந்திரியை சேர்த்துக் கொள்வது உடல் எடை இழப்புக்கு சாதகமாக இருக்கும்.

பாதாம்:

பாதாமில் கலோரிகள் மிகக் குறைவு. பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. ஒரு கைப்பிடி பாதாமில் சுமார் 500 கலோரிகள் உள்ளன. நாள்தோறும் ஐந்து முதல் ஏழு பாதாம் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் உள்பட பல நன்மைகளைப் பெறலாம். பாதாம் கொலஸ்ட்ராலையும் சீராக்கும்.

வால்நெட்:

இதில் உள்ளடங்கி இருக்கும் ஏ.எல்.ஏ. என்னும் என்சைம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவும். அதே நேரத்தில் செரிமானத்தையும் மேம்படுத்தும். வால்நெட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆல்பா-லினோலெனிக் அமிலம் மற்றும் நல்ல கொழுப்பும் நிறைந்துள்ளன. அவை உடலில் கொழுப்பை குறைக்க உதவிபுரியும்.

உலர் திராட்சை:

உடல் எடையை குறைப்பதிலும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் உலர் திராட்சைக்கு முக்கிய பங்கு உண்டு. 100 கிராம் உலர் திராட்சையில் ஒரு கிராமுக்கும் குறைவாகவே கொழுப்பு உள்ளது. கலோரிகளும் (295) குறைவுதான். அதனால் உலர் திராட்சை சத்தான சிற்றுண்டி தயாரிப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.


Next Story