மூலிகை தாவர வளர்ப்பில் வளமான வாய்ப்பு


மூலிகை தாவர வளர்ப்பில் வளமான வாய்ப்பு
x

கொரோனா காலத்திற்கு பிறகு, மூலிகை தாவரங்களின் மீதான மதிப்பு உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலங்கள் உள்ளவர்கள் மூலிகை தாவர வளர்ப்பில் ஈடுபடுவதன் வாயிலாக அதிக லாபம் ஈட்ட இயலும்.

இதன் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில், தேசிய மருத்துவ தாவர வாரியம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்துவருகிறது. இத்தாவரங்கள், மருத்துவம், அழகுசாதன பொருட்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்யலாம்.

பாரம்பரிய சிகிச்சை சுகாதார மையம், 25 முக்கியமான மருத்துவ மூலிகைகளின் தேவை அதிகமாக உள்ளதாக கூறுகிறது. இதில், அஸ்வகந்தா, நீர்பிரம்மி, துத்தி, துளசி, வெட்டிவேர், சர்பகந்தி, எலுமிச்சை புல், கோதுமைப்புல், குளவி, ஆவாரை, கற்றாழை, நெல்லி, என 25 மூலிகை தாவரங்கள் முக்கியமானதாக பட்டியலிடப்பட்டுள்ளன.

விவசாயிகள் இதை வளர்ப்பதற்கு அரசு தரப்பில் பயிற்சி மட்டுமின்றி மானியங்களும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதை உற்பத்தி செய்வதுடன் அல்லாமல், பொடியாகவும், சாறாகவும் பிரித்து மருந்து, அழகு சாதான பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்றால் லாபத்தை பன்மடங்காக மாற்றமுடியும். தனியாக தொழில் மேற்கொள்ள விரும்புபவர்கள், விவசாயிகளிடம் இருந்து இம்மூலிகை தாவரங்களை கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் பொருட்களை செய்து சந்தைப்படுத்தினால், மிகப்பெரும் வாய்ப்பு உருவாகும். 2030ல் இத்தொழிலுக்கான சந்தை வாய்ப்பு பல மடங்கு பெருகி இருக்கும்; அதை உணர்ந்து தற்போதே தொழிலை துவக்க திட்டமிடுங்கள்.


Next Story