மேற்கு வங்காளம்: வாக்கு மையத்தில் அத்துமீறல்; தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி
மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பீர்பும் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட இளம்பஜார் வாக்கு சாவடி மையத்தில் நடைபெறும் வாக்கு பதிவை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் நேரலையாக கண்காணிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில், வாக்கு மையத்தில் இருந்து நபர் ஒருவர் வெளியே வருவதும், பின்னர் உள்ளே செல்வதும் தெரிந்தது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அவரை பதவியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமித்து உள்ளது.
Related Tags :
Next Story