தொகுதி கண்ணோட்டம் விழுப்புரம்(தனி)


தொகுதி கண்ணோட்டம் விழுப்புரம்(தனி)
x
தினத்தந்தி 9 April 2024 7:15 PM IST (Updated: 9 April 2024 7:15 PM IST)
t-max-icont-min-icon

2014-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த துரை.ரவிக்குமார் 5 லட்சத்து 59 ஆயிரத்து 585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

விவசாயமும், விவசாயத்தை சார்ந்த தொழில்கள். அதை மையமாக கொண்ட தொழிலாளர்களும் நிறைந்தது விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி (தனி). அதோடு, சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து மூலமாக வட-தென் மாவட்ட பெருநகரங்களை இணைக்கும் ஒருபாலமாகவும் விழுப்புரம் திகழ்கிறது. இந்ததொகுதி 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு விழுப்புரம் தொகுதி திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதி என்ற பெயருடன் இருந்தது. அப்போது திண்டிவனம், வானூர் (தனி), கண்டமங்கலம் (தனி), விழுப்புரம், முகையூர் திருநாவலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 13-வது இடத்தில் இந்தொகுதி உள்ளது.

இதில் 1951-ம் ஆண்டு தேர்தலில் உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த முனுசாமி வெற்றி பெற்றார். 1957-ம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்ட சண்முகமும், 1962-ம் ஆண்டு (காங்கிரஸ்) வெங்கடசப்பு ரெட்டியாரும், 1967-ம் ஆண்டு (தி.மு.க.)டி.டி.ஆர்.நாயுடுவும் வெற்றிவாகை சூடினர். இதன் பின்னர் நடந்த தேர்தல்களில் காங்கிரசின் கை ஓங்கி, அக்கட்சியின் கோட்டையாக மாறி இருந்தது. அதாவது. 1971, 1977- ம் ஆண்டுகளில் லட்சுமிநாராயணன்(காங்கிரஸ்), 1980, 1984-ம்:ஆண்டுகளில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி (காங்கிரஸ்) தொடர்ச்சியாக தங்களது வெற்றியை பதிவு செய்தனர்.1989-ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர். ராமதாசும்(காங்கிரஸ்), 1991-ம்ஆண்டு திண்டிவனம் கே.ராமமூர்த்தியும் (காங்கிரஸ்)வெற்றிவாகைசூடினர். தி.மு.க.வைசேர்ந்த டி.ஜி.வெங்கட்ராமன்(1995), ம.தி.மு.க.செஞ்சி என்.ராமச்சந்திரன் (1998 மற்றும் 1999), பா.ம.க.வை சேர்ந்த கோ.தன்ராஜூ(2004) ஆகியோர் வெற்றிபெற்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு

இதன் பின்னர் நடந்த தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து விழுப்புரம் தொகுதிஉதயமானது, திண்டிவனம் தொகுறியில் இடம் பெற்றிருந்த கண்டமங்கலம், திருநாவலூர். முகையூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுபுதிதாக உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியும் இதனுடன் சேர்க்கப்பட்டது. தற்போது விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விழுப்புரம், வானூர் (தனி), நிண்டிவனம் (தனி), விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை,திருக்கோவிலூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

முதல் வெற்றி

அ.தி.மு.க.வுக்கு 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது முதன் முதலாக தேர்தலை விழுப்புரம் தொகுதி சந்தித்தது. அந்த முறை அ.திமு.க. நேரடியாக இங்கு களம் கண்டது. அதற்கு பலனும் கிடைத்தது. அக்கட்சியின் முன்னாள் மாநில அமைப்பு செயலாளராக இருந்த எம்.ஆனந்தன். தன்னை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதிபதி சாமிநுரையை விட 2 ஆயிரத்து 797 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த துரை.ரவிக்குமார் 5 லட்சத்து 59 ஆயிரத்து 585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் 4 லட்சத்து 31 ஆயிரத்து

517 வாக்குகள் பெற்றார்.

தொகுதியில் ஆதிதிராவிடர்கள் 30 சதவீதமும், வன்னியர்கள் 32 சதவீதம்மும் உடையார், முதலியார், ரெட்டியார், நாயுடு, செட்டியார். விஸ்வகர்மா, யாதவர். நாடார் மற்றும் பழங்குடி இருளர்கள் 38 சதவீதம் இருக்கிறார்கள். இதேபோல் 90 சதவீதம் இந்துக்களும், சிறுபான்மையினர் 7.8 சதவீதமும். புத்தர். ஜெயின் மதத்தினர் 2.2 சதவீதமும்உள்ளனர்.71. சதவீதத்தினர் கல்வியறிவுபெற்றவர்களாக இருக்கிறார்கள். முழுமைபெறாத திட்டம் குடிசைகள் மிகுந்த தொகுதியான இங்கு வசிக்கும் மக்களின் பெரும்பகுதியினர் ஏழை எளியவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களது அடிப்படை வசதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படாத நிலையே தொடர்கிறது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நடாளுமன்ற தேர்தலில் (2019) 13 பேர் களம் கண்டனர்.இவர்களில் 6 பேர் சுயேச்சை. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில்உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள்கட்சியை சேர்ந்த துரை.ரவிக்குமார் 5 லட்சத்து 59 ஆயிரத்து 585வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு--

துரை.ரவிக்குமார் (வி.சி.க.)..5,39,585

வடிவேல் ராவன் (பா.ம.க.)-4.31,517

கணபதி (அம.மு.க.) ......58,019

பிரஜவதா (நாம் தமிழர் கட்சி).. 24,609

அன்பில் பொய்யாமொழி(மக்கள் நீதி மய்யம்) -17,891

வாக்காளர்கள் எவ்வளவு?

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியவின்படி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 14லட்சத்து 94 ஆயிரத்து 259 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பேரும்,மூன்றாம் பாலினத்தினர் 209 பேரும் உள்ளனர்.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை

விவரம் வருமாறு:-

விழுப்புரம்........2,57,600

விக்கிரவாண்டி....2,33,087

வானூர் (தனி)-2,27,380

திண்டிவனம் (தனி)...2,28,261

உளுந்தூர்பேட்டை...2,91,912

திருக்கோவிலூர்....2,56,019

வாக்காளர்களின் கோரிக்கைகள் என்னென்ன?

ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள்,மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க மத்திய அரசின் சார்பில்

விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் நெல் சி.ஐ. குடோன் ஏற்படுத்தி தர வேண்டும்.2-ம் உலகப்போரின்போதுபயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தை மீண்டும் மறுசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எ முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

சாகுபடி செய்யப்பட்டு வருகிற நிலையில் அவை அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே இத்தொகுதியில் காகித தொழிற்சாலை அமைத்தால் சிறு,குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவருக்கும். தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளின் குறுக்கேகுறைந்தபட்சம் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்திற்கு தடுப்பணைகள்அமைக்க வேண்டும். கரும்பிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்,

ரெயில்வே திட்டங்கள்

திண்டிவனம்- நகரி ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் முழுமை பெறாமல் தொய்வடைந்த நிலையிலேயே உள்ளது.அதுபோல் நிலம் கையகப்படுத்தி பல மாதங்கள் ஆகியும்திண்டிவனம் - புதுச்சேரி ரெயில்வே பாதை பணிகள்தொடங்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது.'விக்கிரவாண்டி ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்கோவிலூரில்ரெயில்வேமேம்பாலம் அமைக்க வேண்டும். திருக்கோவிலூரில் இருந்துதாம்பரத்துக்கு இயக்கப்பட்டபயணிகள்ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியும் நந்தன் கால்வாய்திட்டப்பணி முழுமைபெறாமல் இருப்பது விவசாயிகளிடையேஅதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story