ரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி


ரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி
x

ரேபரேலி தொகுதியில் தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வயநாடு,

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுவான போட்டியை இந்தியா கூட்டணி வழங்கி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன. தெலுங்கு தேசம், ஆர்.ஜே .டி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் இறுதி முடிவு எப்படியும் மாற வாய்ப்புள்ளது.

இதனிடையே இந்தியா கூட்டணி சார்பில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போதைய நிலவரப் படி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார்.

ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை விட 3.88 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் (மொத்தம் 6,84,598 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே இன்று பதிவான அதிக வாக்கு வித்தியாசம் இதுவாகும்.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுவது வழக்கம். கடந்த 2019 தேர்தலில் 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அங்கு இந்த தேர்தலின் மூலம் முதல் முறையாகக் களம் காணும் அவரது மகன் ராகுல் காந்தி தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல வயநாடு தொகுதியிலும் சி.பி.ஐ.எம். வேட்பாளரை விட சுமார் 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் (மொத்தம் 6,47,445 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார்.


Next Story