நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு


நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு
x

நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹ்ரி மஹ்தாப் பதவியேற்றுக்கொண்டார்.

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து 240 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைத்தது.

இதனிடையே 18வது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.

புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். பர்த்ருஹரி மஹ்தாப் 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹ்தாப்பிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக மஹ்தாப் பதவியேற்றுக்கொண்டார்.


Next Story