நாடாளுமன்ற தேர்தல்: தர்மபுரியில் தி.மு.க. - பா.ம.க. இடையே கடும் போட்டி


நாடாளுமன்ற தேர்தல்: தர்மபுரியில் தி.மு.க. - பா.ம.க. இடையே கடும் போட்டி
x

தர்மபுரியில் தி.மு.க. - பா.ம.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தர்மபுரியில் மட்டும் திமுகவுக்கும் பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தர்மபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் ஆ.மணி முன்னிலை பெற்றார். தற்போதைய நிலவரப்படி, திமுக வேட்பாளர் ஆ.மணியை பின்னுக்கு தள்ளி சவுமியா அன்புமணி முன்னிலை பெற்றுள்ளார்.

சவுமியா அன்புமணி 3,28,892 வாக்குகள் பெற்று 3,059 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஆ.மணி 3,25,833 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.


Next Story