நாடாளுமன்ற தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. .இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் ,நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு , .தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா,உள்துறைச் செயலாளர் அமுதா ,டிஜிபி சங்கர் ஜிவால் ,தேர்தல் ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.