தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு - தலைமை தேர்தல் அதிகாரி


தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு - தலைமை தேர்தல் அதிகாரி
x

கோப்புப்படம்

இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆக உள்ளது.

சென்னை,

கடந்த ஜனவரி 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன் பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றையெல்லாம் சரிபார்த்து பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

கடந்த வாரத்தில், தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 ஆக இருந்தது. அதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69; மூன்றாம் பாலினத்தவர் 8,465 என இருந்தது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

தற்போது இந்த வாக்காளர் பட்டியல் (28-ந் தேதி) இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது.

தற்போது இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆகும். அதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665; மூன்றாம் பாலினத்தவர் 8,467 ஆகும்.

இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 10 லட்சத்து 24 ஆயிரத்து 149; பெண்கள் 10 லட்சத்து 61 ஆயிரத்து 457; மூன்றாம் பாலினத்தவர் 385 ஆகும்.வடசென்னை தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224; ஆண்கள் 7 லட்சத்து 30 ஆயிரத்து 395; பெண்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 286; மூன்றாம் பாலினத்தவர் 543.

தென்சென்னை தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133; ஆண்கள் 10 லட்சத்து 851; பெண்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 818; மூன்றாம் பாலினத்தவர் 464. மத்தியசென்னை தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161; ஆண்கள் 6 லட்சத்து 67 ஆயிரத்து 465; பெண்கள் 6 லட்சத்து 82 ஆயிரத்து 241; மூன்றாம் பாலினத்தவர் 455.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119; ஆண்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263; பெண்கள் 12 லட்சத்து 1 ஆயிரத்து 427; மூன்றாம் பாலினத்தவர் 429.

காஞ்சீபுரம் தொகுதியில் மொத்தம் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866; ஆண்கள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 456; பெண்கள் 8 லட்சத்து 95 ஆயிரத்து 107; மூன்றாம் பாலினத்தவர் 303.

இந்த வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று தெரிவித்தார்.


Next Story