சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்குப்பதிவு


Meghbooba Mufti
x

அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசியதற்காக கிடைத்த விலை இது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 25-ந் தேதி 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அன்று வாக்குப்பதிவுக்கு முன்னதாக தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை போலீசார் காவலில் வைத்துவிட்டதாக குற்றம்சாட்டி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்- மந்திரியுமான மெகபூபா முப்தி, திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாவட்ட போலீஸ் நிலையம் முன்பும் போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதை கண்டித்த அவர், "அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசியதற்காக கிடைத்த விலை இது." என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story