அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தோல்வி


அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தோல்வி
x
தினத்தந்தி 4 Jun 2024 1:50 PM GMT (Updated: 4 Jun 2024 2:33 PM GMT)

உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்தார்.

லக்னோ,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் 'இந்தியா' கூட்டணி 235 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்தார். தற்போதைய நிலவரப்படி பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனிடையே 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' போட்டுவிடுவார்கள் என்றும், கோவிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்றும் பா.ஜ.க. தலைவர்கள் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story