பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு: லாலு பிரசாத்தின் 2 மகள்களுக்கு வாய்ப்பு


பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு: லாலு பிரசாத்தின் 2 மகள்களுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 11 April 2024 1:34 AM IST (Updated: 11 April 2024 11:36 AM IST)
t-max-icont-min-icon

லாலு பிரசாத் யாதவின் 2 மகள்களான மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யாவுக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது

பாட்னா,

பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதாதளம் 26 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளான காங்கிரசுக்கு 9 இடங்களும், இடதுசாரிகளுக்கு தொகுதிகளும் வழங்கப்பட்டு உள்ளன.

ராஷ்டிரிய ஜனதாதளத்தின் 26 இடங்களில் 3 தொகுதிகளை விகாஷீல் இன்சான் கட்சிக்கு அந்த கட்சி விட்டுக்கொடுத்து உள்ளது. மீதமுள்ள 23 இடங்களில் 22 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் 2 மகள்கள் மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ரோகிணி ஆச்சாரியா சரண் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார். மிசா பாரதி பாடலிபுத்ராவில் போட்டியிடுகிறார். இவர் மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர்களை தவிர குமார் சர்ஜீத், அர்ச்சனா ரவிதாஸ், ஜெய்பிரகாஷ் யாதவா என கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது.


Next Story