நாடாளுமன்ற தேர்தல்: ராகுல்காந்தி இன்று முதல் மீண்டும் பிரசாரம்


நாடாளுமன்ற தேர்தல்: ராகுல்காந்தி இன்று முதல் மீண்டும் பிரசாரம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 24 April 2024 3:24 AM IST (Updated: 24 April 2024 1:48 PM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவு காரணமாக சிறிது இடைவெளிக்குப் பிறகு, ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

புதுடெல்லி,

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி, இடைவிடாமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் இந்திய கூட்டணி கூட்டம் நடைபெற இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்குபெறாமலே டெல்லி திரும்பினார். கூட்டத்தில் அவருக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி பேசினார்.

தற்போது ராகுல்காந்தி உடல்நலம் தேறி இருப்பதால், புதன்கிழமை (இன்று) முதல் மீண்டும் பிரசார கூட்டங்களில் பங்கேற்பார் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

"ராகுல்காந்தி உடல்நலம் தேறி வருவதால், அவர் நாளை முதல் மராட்டியத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அமராவதியில் பகல் 12.30 மணிக்கும், சோலாபூரில் பிற்பகல் 3.30 மணிக்கும் பொதுகூட்டங்களில் பங்கேற்கிறார்" என்று எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டு உள்ளார்.


Next Story