நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குப்பதிவு
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லக்னோ,
Live Updates
- 20 May 2024 12:31 PM IST
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஸ்மிருதி இரானி வாக்களித்தார். இரானி அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 20 May 2024 12:26 PM IST
காலை 11 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
பீகார் - 21.11%
ஜம்மு-காஷ்மீர் - 21.37%
ஜார்க்கண்ட் - 26.18%
லடாக் - 27.87%
மராட்டியம் - 15.93%
ஒடிசா - 21.07%
மேற்குவங்காளம் - 32.70%
- 20 May 2024 12:19 PM IST
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஸ்ரேயா, பாலிவுட் நடிகர்கள் ராஜ்குமார் ராவ், பர்ஹான் அக்தர் மற்றும் திரைப்பட இயக்குனர் சோயா அக்தர் ஆகியோர் வாக்களித்தனர்.
- 20 May 2024 12:07 PM IST
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஹேமமாலினி தனது மகள் ஈஷா தியோல் உடன் வந்து வாக்களித்தா. ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக 3வது முறையாக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 20 May 2024 11:59 AM IST
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான கோவிந்தா வாக்களித்தார்.
- 20 May 2024 11:58 AM IST
11 மணி நிலவரப்படி 23.66 சதவீத வாக்குப்பதிவு
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 20 May 2024 11:55 AM IST
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா வாக்களித்தார்.
- 20 May 2024 11:51 AM IST
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாக்களித்தார். இவர் லக்னோ தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 20 May 2024 10:39 AM IST
மராட்டிய மாநிலம் தானே பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வாக்களித்தார்.
- 20 May 2024 10:33 AM IST
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அக்சய் குமார் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து வாக்களித்தேன். இந்தியாவிற்கு எது சரி என்று நினைத்து அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் சதவீதம் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.