திருச்சானூர் தெப்போற்சவம்.. தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்த சுந்தரராஜ சுவாமி


Tiruchanoor Teppotsavam, Sri Sundaraja swami
x
தினத்தந்தி 19 Jun 2024 5:57 PM IST (Updated: 19 Jun 2024 6:39 PM IST)
t-max-icont-min-icon

விழாவின் கடைசி மூன்று நாட்கள், அதாவது இன்று முதல் மூன்று நாட்கள் பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.

திருப்பதி:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட பத்மசரோவர் திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்கள் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழாவின் முதல் நாளில் ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்மசரோவர் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டு தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.

இன்று முதல் மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21-ம் தேதி) பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.


Next Story