ஆடி அமாவாசை: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை
முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி பலவிதமான மலர்கள் மற்றும் கனி வகைகளால் கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து முருகப்பெருமனுக்கு தங்ககவச ஆடை அணிவித்து வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாபூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
Related Tags :
Next Story