ஈரான் மீதான போர்; ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு - இஸ்ரேல் தகவல்


ஈரான் மீதான போர்; ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு - இஸ்ரேல் தகவல்
x

Image Courtesy : PTI

இஸ்ரேல் தொடங்கிய போரின் முதல் 48 மணிநேரத்தில் மட்டும் ரூ.12,035 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஜெருசலேம்,

ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி விட்டதாக உலக நாடுகள் கூறுகின்றன. இந்த நிலையில், ஈரான் மீதான போரில் இஸ்ரேலின் செலவு குறித்த விவரங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த போருக்காக ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை இஸ்ரேல் செலவு செய்வது தெரியவந்துள்ளது. ஈரான் மீதான தற்போதைய போர் சூழலில், ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர் (ரூ. 8,659 கோடி) செலவிடப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகர் ரீம் அமினாச் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடங்கிய போரின் முதல் 48 மணிநேரத்தில் மட்டும் ரூ.12,035 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை செலவுக் கணக்கில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story