அமெரிக்கா: வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


அமெரிக்கா: வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 2 March 2025 3:15 AM IST (Updated: 2 March 2025 3:15 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலையின் ஒரு பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கு திடீரென வெடித்து சிதறியது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் தென்மேற்கு பிராந்தியத்தில் வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்தநிலையில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கு திடீரென வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் அதிகளவில் இல்லை. எனவே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story