இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

ஏசியான் அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.
கோலாலம்பூர்,
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஏசியான் அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி, இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி பெடி ஹெங்செத்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் இருநாட்டு ராணுவம், பாதுகாப்பு மேம்பாட்டிற்கு அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்தியா , அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






